Posts

Showing posts from 2012

255 tamilnadu government gazette

Image

வக்பு வாரிய தலைவராக தமிழ்மகன் உசேன்

Image
நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்மகன் உசேன் ( 73). இவர் கடந்த 10 ம் தேதி நடந்த வக்பு வாரிய கூட்டத்தில் , தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். வக்பு வாரியத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்மகன் உசேன் 1956 ம் ஆண்டு முதல் தொடர்ந்து 40 ஆண்டுகள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.   1972 ல் இருந்து தொடர்ந்து 13 ஆண்டுகள் 8 மாதம் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். அதன்பின் , 1990 ல் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட இணை செயலாளராக இருந்தார். 2 ஆண்டுகளாக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் , கடந்த ஓராண்டாக கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் , இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் , தமிழ்நாடு அரசு இதழில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

APPOINTMENT OF CERTAIN PERSONS AS MEMBERS IN THE TAMIL NADU WAKF BOARD UNDER THE WAKF ACT.

Image

புகைப்படங்கள்

Image
வெற்றி பெற்ற இருவர் வெளியேறிய ஐவர்  

2012 முத்தவல்லி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த நான்காவது வக்பு வாரிய முத்தவல்லி உறுப்பினர்கள் பிரிவுக்கான தேர்தலில்  முகம்மது சிக்கந்தர் மற்றும் டாக்டர் ஹாஜா கே.மஜிது வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற சகோதரர்களுக்கு எமது மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  பெற்ற வாக்குகள் விபரம் 1.முகம்மது சிக்கந்தர்                 211 2.டாக்டர் ஹாஜா கே.மஜிது   209 3.நைய்னா முகம்மது                 130 4.சகீல் அஹமது                            81 5.முகம்மது பஜ்லுல் ஹக்          54 6.அலாவுதீன்                                    31 7.இனாயத் உசேன் கான்              28

பிழை திருத்தி வாசிக்கவும்.

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும். நான் தொகுத்து உங்களுக்கு அனுப்பியுள்ள முத்தவல்லிகளின் முகவரி தொகுப்பில் கவனக்குறைவாக பக்க எண் 7-ல் சேர்மன் லிஸ்ட் தலைப்பில் வெளியாகியுள்ள பெயர்களில் 11-வது போர்டு 27.03.2007 முதல் 09.06.2009 வரையில் ஜனாப் S.ஹைதர் அலி என்றும், 10.06.2009 முதல் ஜனாப் கவிக்கோ டாக்டர் அப்துர் ரஹ்மான் M.A., Ph.D., என்று திருத்தி வாசிக்கவும். ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.  அன்புடன் ஹக். 98940 19995. எதிர்வரும்  தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகள் பிரிவு தேர்தலில்  வாக்களிப்பீர்! வாய்ப்பளிப்பீர்!! முதல் வாக்கை எனக்களிப்பீர்!!! அன்புடன் முகம்மது பஜ்லுல் ஹக்

Wakf Election contestant list 2012

1. K.N.ALAVUDEEN, Kalingiyam Gopi 2. Dr.HAJA K.MAJEED, Royapuram, Chennai 3. A.INAYATH HUSSAIN KHAN, Bodi Nayakanoor 4.  K.MOHAMED FAZULUL HAQ , Aravakurichi, Karur 5. M.MOHAMED SIKKANDASR, Purasaivakkam, Chennai 6. SHAKEEL AHAMED. Vaniyambadi 7. V.A.NAINA MOHAMED, Tirunelveli

தேர்தல் அதிகாரிகள் நியமனம்

Image
வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல் 2012 -க்கு தலைமை அதிகாரியாக திரு. M.H.முகைதீன்  Joint Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department அவர்களும், துணை அதிகாரிகளாக திரு. M.ஷாஜஹான்  Under Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department, மற்றும் திரு. அஜீஸ் அஹமது  Under Secretary to Government, Animal Husbandary and Fisheries Department அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

annexure I & annexure II

Image

கடிதம்

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே! வக்பு வாரிய உறுப்பினர் தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்ற விபரம் விரைவில் வெளிவரும்.  அதற்கு முன்பாக ஒரு கனிவான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கின்றேன்.  நமக்கான நல்ல பிரதிநிதியினை தேர்வு செய் ய அனைவரும் வாக்களியுங்கள்  மொத்தமுள்ள 776 வாக்காளர்களும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்களோ அவர்களுக்கு உங்களுடைய வாக்கினை தவராமல் அளிக்கவும். மேலும் வாக்களிக்க ஏதுவாக Anexure I மற்றும் Anexure II இரண்டினையும் தங்களுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளேன். அதனை பெற்றுக்கொண்டு உரிய விபரங்களை நிரப்பி வக்பு கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று  Returning Officer க்கு அதனை அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு தங்களுடைய மண்டல கண்காணிப்பாளைரை தொடர்பு கொள்ளவும். அன்புடன் முகம்மது பஜ்லுல் ஹக்.

வக்பு வாரிய தேர்தல் 2012 - Tamilnadu Wakf Board Election

Image
 இன்ஷா அல்லாஹ் வக்பு வாரிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் 29.08.2012 புதன் கிழமை அன்று நடைபெறுமென தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக அறிவிக்ப்பட்டுள்ளது. அதன்படி 02.08.2012 முதல் 09.08.2012 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் 10.08.2012 அன்று வேட்பு மனு பரிசீலனை 13.08.2012 அன்று மனுக்கல் திரும்பப் பெறலாம் 14.08.2012 இறுதிப்பட்டியல் வெளியீடு 29.08.2012 இன்று வாரிய உறுப்பினர் தேர்தல்

வக்பு வாரிய உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக போர்கொடி

வக்பு வாரிய உறுப்பினர்களாக அமைச்சர் முகமது ஜான் , ராஜ்யசபா தி.மு.க. , - எம்.பி. , முகமது அலி ஜின்னா ஆகியோரை நியமித்த விவகாரம் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. உறுப்பினர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் , திட்டமிட்டபடி வாரியத்தலைவர் பதவியை ஆளுங்கட்சி கைப்பற்றுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக முஸ்லிம் சொத்துக்களை பராமரித்து , பாதுகாக்கவும் , அபகரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கவும் உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம்.கடந்த தி.மு.க. , ஆட்சியில் , வக்பு வாரியத் தலைவராக பணியாற்றிய கவிஞர் அப்துல்ரகுமான் , ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் , தனது பதவியை ராஜினாமா செய்தார். அ.தி.மு.க. , ஆட்சி அமைந்து , ஓராண்டு முடிவடைந்த நிலையில் , தற்போது தான் வக்பு வாரியத்திற்கு , தலைவர் மற்றும் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது. வாரிய உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து , வாரியத் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர். 12 உறுப்பினர்கள்இதற்காக வக்பு வாரியத்திற்கு , 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. அதில் இருஉறுப்ப...

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பு!

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் - கடந்த ஓர் ஆண்டாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள் தேர்வினை விரைவில் நடத்திட ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு: 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களிலிருந்து தனித்தனியாக உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் 26.6.12 அன்று தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம், மண்டல கண்காணிப்பாளர்கள் (வக்ஃப்) அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பாக யாருக்காவது ஆட்சேபணையிருந்தால் அவர்கள் தங்களின் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகளை ஒரு வார காலத்தி...

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல் 2012

Image

எல்லாப் புகழும் இறைவனுக்கே

அளவிலாக் கருணையும், நிகரிலா புகழும் உடைய எல்லாம் வல்ல இறைவனின் துணையுடன் துவங்குகின்றேன். அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். தமிழக முத்தவல்லிகளின் தகவல் சேவைக்காக இந்த வலைப்பக்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது. தங்களின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறுங்கள். சேவை செய்ய காத்திருக்கின்றேன். அன்புடன் ஹக். 98940 19995