வக்பு வாரிய தலைவராக தமிழ்மகன் உசேன்
நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்
தமிழ்மகன் உசேன் (73). இவர் கடந்த 10ம் தேதி நடந்த வக்பு வாரிய கூட்டத்தில், தலைவராக ஒரு மனதாக தேர்வு
செய்யப்பட்டார். வக்பு வாரியத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழ்மகன் உசேன் 1956ம் ஆண்டு முதல் தொடர்ந்து
40 ஆண்டுகள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக பணியாற்றினார்.
1972ல் இருந்து தொடர்ந்து 13 ஆண்டுகள் 8 மாதம் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். அதன்பின், 1990ல் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக
மாவட்ட இணை செயலாளராக இருந்தார். 2 ஆண்டுகளாக அனைத்து உலக
எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும், கடந்த ஓராண்டாக கட்சியின்
ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவல், தமிழ்நாடு அரசு இதழில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment