வக்பு வாரிய உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக போர்கொடி
வக்பு வாரிய உறுப்பினர்களாக அமைச்சர்
முகமது ஜான், ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., முகமது அலி ஜின்னா ஆகியோரை நியமித்த
விவகாரம் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை
கிளப்பியுள்ளது. உறுப்பினர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி
வாரியத்தலைவர் பதவியை ஆளுங்கட்சி கைப்பற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக
முஸ்லிம் சொத்துக்களை பராமரித்து, பாதுகாக்கவும், அபகரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கவும் உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம்.கடந்த
தி.மு.க., ஆட்சியில், வக்பு
வாரியத் தலைவராக பணியாற்றிய கவிஞர் அப்துல்ரகுமான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஓராண்டு முடிவடைந்த நிலையில், தற்போது தான் வக்பு வாரியத்திற்கு, தலைவர் மற்றும் 12 உறுப்பினர்களை
தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது. வாரிய உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, வாரியத் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
12 உறுப்பினர்கள்இதற்காக வக்பு
வாரியத்திற்கு, 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. அதில்
இருஉறுப்பினர்கள் எம்.பி.,யாகவும், இரு
உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்களாகவும் இருக்க வேண்டும். பார் கவுன்சிலிலிருந்து, முன்னாள் உறுப்பினர் ஒருவரும், தற்போதைய உறுப்பினர் ஒருவர் என இருவர்
உறுப்பினராக தேர்வு பெறுவர்.சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்
பிரிவுகளின் தலைமை
ஹாஜிக்கள் என்ற அடிப்படையில், இரு உறுப்பினர்களும், முத்தவல்லிகள் மூலம் இரு உறுப்பினர்களும், பொது பிரிவில் இருஉறுப்பினர்களுமாக மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அ.தி.மு.க.,வில் முஸ்லிம் எம்.பி.,யாக ஒருவர் கூட இல்லை. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் உள்ளார். எம்.பி.,க்கள் பிரிவில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆரூண் எம்.பி.,யும், தி.மு.க.,விலிருந்து ராஜ்யசபா எம்.பி., முகம்மது அலி ஜின்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.எம்.எல்.ஏ.,க்கள் பிரிவில், சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் முகமது
ஜான், ஆவடி எம்.எல்.ஏ., அப்துல் ரஹீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது பிரிவின்
அடிப்படையில்
அ.தி.மு.க., நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், சர்ந்த பாரூக் நியமிக்கப்பட்டுள்ளனர். முத்தவல்லிகள் மூலம் தேர்வு செய்யப்படும் இரு உறுப்பினர்களுக்கான
தேர்தல், அடுத்த மாதம் நடக்கிறது. இந்த தேர்தல்
முடிந்த பின், தலைவர் தேர்தல்
நடைபெறவுள்ளது.ஐகோர்ட்டில் வழக்குஇந்நிலையில், எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்களை உறுப்பினராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என, மனித நேய மக்கள் கட்சி சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், தலைவர்
தேர்தல் நடைபெறுமா? அல்லது இன்னும் தள்ளி போகுமா? என்ற கேள்வி உருவாகியுள்ளது.இது குறித்து முஸ்லிம் கட்சி பிரமுகர் ஒருவர்கூறியதாவது:தமிழக
சட்டசபையில், ஐந்து முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அமைச்சர் முகம்மது ஜான், ஆவடி எம்.எல்.ஏ., அப்துல் ரஹீம் ஆகியோர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். மனித நேய மக்கள் கட்சிசார்பில், பொதுச்செயலர் ஜவஹிருல்லாஹ், அஸ்லாம் பாட்ஷா ஆகியோர் உள்ளனர். தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் மைதீன்கான்
உள்ளார்.நியமனத்தில் தவறு?சட்டசபையில் இரு முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களுக்கு மேல் இருந்தால், யாரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என மொத்த முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களும்
சேர்ந்து ஓட்டு
போடுவதன்மூலம், இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல், தமிழகத்தில் மூன்று முஸ்லிம் எம்.பி.,க்கள் இருப்பதால், ஓட்டு மூலம் இரு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆனால், தமிழக அரசு, தேர்தல் மூலம், உறுப்பினர்களை தேர்வு செய்யாமல், தன்னிச்சையாக
நியமித்துள்ளது. எனவே, இந்தநியமனத்தை ரத்து செய்ய வேண்டும்
என்று வலியுறுத்துகிறோம். வாரியம் தொடர்பான அப்பீல் மனுக்களை விசாரிக்க வேண்டிய
பொறுப்பு அமைச்சரிடம் வரும் என்பதால், அவரையும்
உறுப்பினராக நியமிக்கக் கூடாது. எனவே, அமைச்சர் முகம்மது
ஜானின் உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஐகோர்ட்டில்
வழக்கு தொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர்
Comments
Post a Comment