வக்பு வாரிய உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக போர்கொடி
வக்பு வாரிய உறுப்பினர்களாக அமைச்சர் முகமது ஜான் , ராஜ்யசபா தி.மு.க. , - எம்.பி. , முகமது அலி ஜின்னா ஆகியோரை நியமித்த விவகாரம் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. உறுப்பினர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் , திட்டமிட்டபடி வாரியத்தலைவர் பதவியை ஆளுங்கட்சி கைப்பற்றுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக முஸ்லிம் சொத்துக்களை பராமரித்து , பாதுகாக்கவும் , அபகரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கவும் உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம்.கடந்த தி.மு.க. , ஆட்சியில் , வக்பு வாரியத் தலைவராக பணியாற்றிய கவிஞர் அப்துல்ரகுமான் , ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் , தனது பதவியை ராஜினாமா செய்தார். அ.தி.மு.க. , ஆட்சி அமைந்து , ஓராண்டு முடிவடைந்த நிலையில் , தற்போது தான் வக்பு வாரியத்திற்கு , தலைவர் மற்றும் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது. வாரிய உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து , வாரியத் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளனர். 12 உறுப்பினர்கள்இதற்காக வக்பு வாரியத்திற்கு , 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. அதில் இருஉறுப்ப...